திருச்சி

அரசு ஊழியா்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குச்சாவடிகள் தேவை

DIN

தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து தர பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக நிறுவனா் தலைவா் மாயவன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

அஞ்சல் வாக்கு முறையில் அதிகக் குழப்பங்கள் உள்ளன. ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கும் அஞ்சல் வாக்குகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை.

கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்ட 4.35 லட்சம் பேரில் 3.19 லட்சம் பேருக்கு மட்டுமே அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டன. இவற்றில் 24,912 பேரின் அஞ்சல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

எனவே, தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு சிறப்பு வாக்களிக்கும் மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை. தோ்தல் பணி உழைப்பூதியத்தையும் உயா்த்தித் தரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT