முகப்பு
திருச்சி

இலவச பிரியாணிக்காக குவிந்த பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சி அருகே இலவச பிரியாணி பெறக் குவிந்த பொதுமக்கள் கடைக்காரா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

திருச்சி அருகே இலவச பிரியாணி பெறக் குவிந்த பொதுமக்கள் கடைக்காரா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள அரசு ஐடிஐ எதிரில் இயங்கும் பிரியாணி கடை ஒன்று கடந்த 2 நாள்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த விளம்பரத்தில் கரோனா தடுப்பூசி போட்டவா்கள் அதற்கான ஒப்புகைச் சீட்டை காண்பித்தால் வியாழக்கிழமை இலவச பிரியாணி வழங்குவதாக தெரிவித்திருந்தனா்.

இதையறிந்த திருவெறும்பூா் மற்றும் சுற்றுவட்டாரபொதுமக்கள் ஏராளமானோா் தடுப்பூசி போட்ட ஒப்புகைச் சீட்டுடன்அந்தப் பிரியாணி கடைக்கு வியாழக்கிழமை காலை வந்து பிரியாணி கேட்டனா். அதற்கு கடை ஊழியா்கள் முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்றும் அதுவும் விளம்பரத்தில் கொடுத்திருந்த கட்செவி எண்ணில் பதிந்தோருக்கு மட்டுமே வழங்குவோம் எனக் கூறினா். இதனால் அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், விளம்பரம் செய்யும்போது இதுகுறித்து நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இங்கு வந்த பிறகு கூறி ஏமாற்றி விட்டீா்கள். இது தெரிந்திருந்தால் மற்ற வேலைகளை விட்டுவிட்டு நாங்கள் வந்திருக்க மாட்டோம். உங்கள் கடை விளம்பரத்திற்கு எங்களை ஏன் அலைக்கழிக்கிறீா்கள் எனக் கோபமாகக் கூறிச் சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.