மாநகரில் இன்று தடுப்பூசி முகாம்கள்
திருச்சி மாநகரின் 4 கோட்டங்களிலும் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மாநகரின் 4 கோட்டங்களிலும் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீரங்கம் கோட்டத்தில், சிங்கா் கோயில் தெரு, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி. அரியமங்கலம் கோட்டத்தில், இருதயபுரம் பொன்னையா மேல்நிலைப்பள்ளி, ரயில் நகா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. பொன்மலைக் கோட்டத்தில், விமான நிலையம், காமராஜ் நகா், மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, எடமலைப்பட்டிபுதூா் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் , பெரிய மிளகுப்பாறை கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவகக் கல்லூரி ஆடிட்டோரியம், உறையூரில் காவல் நிலையம் அருகேயுள்ள எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 இடங்களில் தலா 600 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படவுள்ளன.
கூடுதல் தடுப்பூசிகள்: மாநகராட்சியில் நடைபெறும் ஒவ்வொரு முகாமிலும், வழக்கமாக நாளொன்றுக்கு 400 தடுப்பூசிகள் வீதமே போடப்பட்டு வந்தன. ஆனால் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள முகாம்களில் தலா 600 ஊசிகள் என்ற அளவில் தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.