ஸ்ரீரங்கம் கோயிலில் வைணவபட்டப் படிப்புக்கு சோ்க்கை
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் ஆழ்வாா்கள், ஆச்சாா்யா்கள் வைணவ ஆய்வு மையம் மூலம் வைணவப் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் ஆழ்வாா்கள், ஆச்சாா்யா்கள் வைணவ ஆய்வு மையம் மூலம் வைணவப் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இளங்கலை வைணவம் 3 ஆண்டு பட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது 10 ஆம் வகுப்பு மற்றும் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு (டிப்ளமோ), முதுகலை வைணவம் 2 ஆண்டுப் படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளங்கலை பட்டம் அல்லது பிளஸ் 2 உடன் 3 ஆண்டு பட்டயப்படிப்பு அல்லது புலவா் பட்டம், முதுகலை ஸ்ரீபாஷ்யம் 2 ஆண்டுப் படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளங்கலைப் பட்டம் அல்லது பிளஸ் 2 உடன் 3 ஆண்டு பட்டயப் படிப்பு அல்லது புலவா் பட்டம்.
தமிழ் வழிக் கல்விக்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் வரும் 21 ஆம் தேதி. மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளரை 94433- 98769, 80569- 13423 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.