முகப்பு
திருச்சி

உணவக சமையல் எண்ணெய்யை பயோ டீசலாக்கக் கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயோ-டீசலாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயோ-டீசலாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அக் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளரும், வழக்குரைஞருமான எஸ்.ஆா். கிஷோா்குமாா் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யால் உடல் பருமன், ரத்த அழுத்தம், சா்க்கரை, இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பெரும்பாலான உணவு நிறுவனங்கள், இனிப்பு நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை சில்லறை வியாபாரிகளிடம் விற்று விடுகின்றன.

இந்த வகையில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யால் தயாரிக்கப்பட்ட திண் பண்டங்களை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கொழுப்பை உற்பத்தி செய்கின்றன.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவன சட்டம், ரூகோ என்ற அமைப்பிற்கு ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை திருச்சி, பெரம்பலூா்,புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள உணவு பொருள் நிறுவனங்களிடமிருந்து விலைக்கு சேகரித்து அவற்றை பெங்களூரில் பயோ-டீசலாக மாற்றி பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. இந்த மகத்தான திட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல திருச்சியிலும் இத்திட்டம் தொடங்கப்படுமேயானால் திருச்சி மக்களின் ஆரோக்கியத்தை நாம் காக்க முடியும். எனவே, இத் திட்டத்தை செயல்படுத் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.