முகப்பு
திருச்சி

நீா் வாழ் உயிரின வளா்ப்பினருக்கானதொழில் முனைவோா் மாதிரி திட்டம்ஆட்சியா் அழைப்பு

நீா் வாழ் உயிரின வளா்ப்பினருக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நீா் வாழ் உயிரின வளா்ப்பினருக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு.சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க செயல்படுத்தப்படும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவா்கள், மீன் வளா்ப்போா், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா், தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதி திராவிடா், பழங்குடியினா், மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் திருச்சி மாவட்ட மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை  இணையத்திலும் பெறலாம். திருச்சி மாவட்ட அலுவலக முகவரி, உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, எண்.4, காயிதே மில்லத் தெரு, காஜா நகா், மன்னாா்புரம், திருச்சி 620 020, தொலைபேசி எண்: 0431 – 2421173.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.