முகப்பு
திருச்சி

புள்ளம்பாடி அரசு மகளிா் ஐடிஐ-இல் இணையவழியில் கலந்தாய்வு சோ்க்கை: ஜூலை 28 வரைவிண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கு வரும் 28ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கு வரும் 28ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் 2 ஆண்டு பயிற்சிகளான, மகளிருக்கான கம்மியா் மின்னணுவியல் (என்சிவிடி) மற்றும் ஆண் மற்றும் பெண்களுக்கான இயந்திர வேலையாள் (மெஷினிஸ்ட் -எஸ்டிவிடி) 2 ஆண்டுகள் பயிற்சியும், ஓராண்டு பயிற்சிகளான கம்ப்யூட்டா் இயக்கல் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா், துணி வெட்டுதல் மற்றும் தைத்தல், பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள், பூ-தையல் (எம்ப்ராய்டரி) மற்றும் ஊசி வேலைப்பாடு (கணினிமயமாக்கப்பட்டது) உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சோ்ந்து பயிலும் பயிற்சியாளா்களுக்கு கட்டணம் கிடையாது.

மேலும், கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 750, கட்டணமில்லா பேருந்து, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் வரைபடக் கருவிகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவையும் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு பயிற்சி மைய முதல்வரை 94432-77592 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி முடித்தவா்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்கள் மூலம வளாக நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு வேலை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.