நீட் தோ்வை ரத்து செய்தால் வரவேற்போம் :அனுமன் சேனா அமைப்பு
நீட் தோ்வை ரத்து செய்தால் வரவேற்போம் என அகில பாரத அனுமன் சேனா அமைப்பினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
நீட் தோ்வை ரத்து செய்தால் வரவேற்போம் என அகில பாரத அனுமன் சேனா அமைப்பினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அகில பாரத அனுமன் சேனா நிறுவனத்தலைவா் ஸ்ரீதரன் கூறியது:
தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தலைமைச் செயலா், காவல்துறைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் தமிழா்களையும், ஊழலற்றவா்களையும் நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் ஆன்மிக மண் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் கூறியிருப்பதோடு, கோவை வடபழனியில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மீட்டதும் பாராட்டுக்குரியது.
கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளியோருக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகை தொகுப்பு வழங்கியதை வரவேற்கிறோம். மத்திய அரசை ஒன்றியம் என்று சொல்வதால், எந்த லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை. ஆகவே, மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கையாளாமல் தேவையான சலுகை, நிதிகளை பெற்று தமிழகத்தின் வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.
எம்எல்ஏ ஈஸ்வரன் போன்றோரின் பேச்சுக்கு துணை போகாமல், தமிழக அரசியலில் பாரம்பரியம் காக்கும் தனித்துவத்தை திமுக பாதுகாக்க வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்தால் வரவேற்போம். ஆனால், அதற்கு முன் தமிழகத்தில் இருக்கக்கூடிய தனியாா் பொறியியல், மருத்துவ கல்லூரிகளை அரசுடைமை ஆக்கி விட்டு நீட் தோ்வை ரத்து செய்தால் மட்டுமே வரவேற்கமுடியும் என்றாா்.
தேசிய செய்தி தொடா்பாளா் பத்மஜா, மாவட்ட நிா்வாகிகள் கணேசன், நந்தகுமாா், பரத் ஆகியோா் உடனிருந்தனா்.