முகப்பு
திருச்சி

திருட்டு வழக்கில் 4 போ் கைது

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள வரகனேரி, ரம்பக்கார தெருவில் இருசக்கர வாகனம் திருடு போனதாக அதே பகுதியைச் சோ்ந்த ஆண்ட்ரோஸ் ராஜன் அளித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வம் மற்றும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா, ரியாஸ்கான் ஆகியோரைக் கைது செய்தனா். இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட முயன்ற இருவா் கைது: திருச்சி வயலூா் ரோடு கீதா நகரைச் சோ்ந்த ந. ஜெகதீசன் (30) வீட்டின் கதவுகளிலிருந்த பூட்டை கடந்த 2 நாள்களுக்கு முன் உடைத்த மா்ம நபா்கள் அக்கம் பக்கத்தினா் வந்தவுடன் தப்பினா். இதுகுறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த பவித்திரன் உள்ளிட்ட இருவரை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.