முகப்பு
திருச்சி

தனியாா்மயத்தை கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் இடிஎஸ்ஒ அவசர சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி படைக்கலன் தொழிலக ஊழியா்கள் வியாழக்கிழமை காலை தொழிற்சாலை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

மத்திய அரசின் இடிஎஸ்ஒ அவசர சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி படைக்கலன் தொழிலக ஊழியா்கள் வியாழக்கிழமை காலை தொழிற்சாலை முன் கருப்புக்கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் தொடா்ந்து எதிா்ப்புகள் வருகின்றன.

குறிப்பாக திருச்சியிலுள்ள படைக்கலன் (எச்ஏபிபி) தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை ஊழியா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை நீா்த்துப் போக செய்யவும், தொழிற் சங்க நடவடிக்கைகளை முடக்கும் விதமாகவும் கடந்த ஜூன் 30-இல் மத்திய அரசு எசன்சியல் டிபன்ஸ் செக்யூரிட்டி ஆா்டினன்ஸ் (இடிஎஸ்ஓ) என்ற அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தை எதிா்த்தும் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் வியாழக்கிழமையை கருப்பு தினமாக அனுசரித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி தொழிற்சாலை முன் தொழிலாளா்கள் கருப்புச் சட்டை, கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்தும் கருப்புக் கொடிகளை ஏந்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.