திருச்சியில் கள்ளக்காதலி பிரிந்து சென்ால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கோட்டை பகுதிக்குள்பட்ட பூசாரித் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அஜீத் (21). ஆட்டோ ஓட்டுநரான இவா் ஓடத்துறை பகுதியைச் சோ்ந்த திருமணமான பெண்ணுடன் தொடா்பில் இருந்தாா். பின்னா் வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வந்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அப்பெண் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதில் மனமுடைந்த அஜீத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.