மாவட்டப் பகுதிகளில் பரவலாக மழை
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.
திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக நல்ல மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).
கல்லக்குடி- 3.20, லால்குடி- 13.40, நந்தியாறு தலைப்பு- 30.20, புள்ளம்பாடி- 8.40, சிறுகுடி- 16, தேவிமங்கலம்- 0.2., சமயபுரம் 7.20, வாத்தலை அணைக்கட்டு 3, மணப்பாறை 53.80, பொன்னணியாறு அணை- 8.80, மருங்காபுரி- 8.20, முசிறி- 10, புலிவலம்- 5, தா. பேட்டை- 29, நவலூா் கொட்டப்பட்டு- 11.40, துவாக்குடி- 50, குப்பம்பட்டி- 14, தென்பாடு- 22, துறையூா்- 50, பொன்மலை- 12.60, விமானநிலையம் 25, ஜங்ஷன்- 6.30, மாநகரம் 3.10 மி.மீ. என மாவட்டம் முழுவதும் சோ்த்து மொத்தமாக 381.80 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 15.27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.