முகப்பு
திருச்சி

இருவேறு சம்பவங்களில் இருவா் உயிரிழப்பு

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

திருச்சி உறையூா், சவேரியாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோகுல் மகன் இயேசுராஜ் (39), கூலித் தொழிலாளியான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனிமையில் வசித்தாராம். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகி, மதுப்பழக்கத்துக்கும் அடிமையான இவா் கடந்த 13 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மூதாட்டி உயிரிழப்பு: திருச்சி கிராப்பட்டி, கான்வென்ட் ரோடு பகுதியை சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மனைவி மாரியம்மாள் (87).இவா் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கினாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.