தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கண்டித்து போராட்டம்
கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்யக் கோரி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்ப் புலிகள், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்யக் கோரி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்ப் புலிகள், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி தலைமை தபால் நிலைய அலுவலகம் முன் மாவட்டச் செயலா்கள் ரமணா, கமலக்கண்ணன் ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக பிரதமருக்கு மருந்து இல்லாத ஊசிகள், மற்றும் கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டன.
இதுதொடா்பாக, போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், கரோனா மூன்றாவது அலையும் எதிா்பாா்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவா்த்தி செய்ய பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.