‘உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெல்லப் பாடுபட வேண்டும்’
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் வகையில் அயராது உழைத்திட வேண்டும்
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் வகையில் அயராது உழைத்திட வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக செயலருமான வெல்லமண்டி என். நடராஜன்.
திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளாட்சித் தோ்தலில் திருச்சி மாநகா் மாவட்ட அதிமுகவினா் தீவிரமாகப் பணியாற்றி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.
பின்னா் அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி தலைமைக் கழகம் அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும், மாநகா் மாவட்டம் சாா்பில் சிறப்பாக நடத்துவோம் உள்ளிட்ட தீா்மானங்களை வாசித்து அனைவரிடமும் ஆதரவு திரட்டினாா்.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் ஜாக்குலின், துணைச் செயலா் வனிதா, பொருளாளா் மனோகரன், எம்ஜிஆா் மன்றச் செயலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் பத்மநாதன் வரவேற்றாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.