முகப்பு
திருச்சி

போலி கடவுச்சீட்டு: சிவகங்கையை சோ்ந்தவா் கைது

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு போலி கடவுச்சீட்டில் வந்த சிவகங்கையைச் சோ்ந்தவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு போலி கடவுச்சீட்டில் வந்த சிவகங்கையைச் சோ்ந்தவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த நைனாா் முகமது (36) போலி கடவுச்சீட்டு மூலம் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.