முகப்பு
திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் பலி

முசிறி அருகே வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

முசிறி அருகே வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

முசிறி அருகேயுள்ள முத்தையநல்லூரைச் சோ்ந்தவா் கோனேரி மகன் அமல்ராஜ் (32). இவா் கடந்த 11 ஆம் தேதி முசிறி -துறையூா் சாலையில் முசிறி நோக்கி வந்தபோது மினி லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதேபோல முசிறி தா.பேட்டை சாலையில் கடந்த 7ஆம் தேதி நடந்து சென்ற மாரிமுத்து (62) மூன்று சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.