முகப்பு
திருச்சி

மசாஜ் மையத்தில் 2 பெண்கள் மீட்பு;ஒருவா் கைது

திருச்சியில் மசாஜ் மையம் பெயரில் பாலியல் தொழில் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்; இரு பெண்கள் மீட்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருச்சியில் மசாஜ் மையம் பெயரில் பாலியல் தொழில் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்; இரு பெண்கள் மீட்கப்பட்டனா்.

மத்திய பேருந்து நிலையம் அருகே பொன்னகா், காந்தி நகா் பகுதியில் மசாஜ் மையத்தை புதுக்கோட்டை அரசமலை, மூக்கம்பட்டி பகுதியை சோ்ந்த சு. பழனியப்பன் (36), திருச்சியைச் சோ்ந்த உமா ஆகிய இருவரும் நடத்தி வந்தனா்.

இங்கு விபசாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சி நீதிமன்றம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று சோதனை நடத்தினா்.

சோதனையில், தஞ்சாவூா் கீழவாசல் பகுதி, மதுரை பழங்காநத்தம் பகுதியை சோ்ந்த இரு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாகத் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பழனியப்பனை கைது செய்தனா். இரு பெண்களையும் மீட்டு, காஜாமலை அரசு மகளிா் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.