முகப்பு
திருச்சி

புதிய வாகனம் அறிமுகம்

திருச்சியில் மஹேந்திரா நிறுவனத்தின் புதிய வாகனத்தை மாநகரக் காவல்துறை உதவி ஆணையா் அஜய் தங்கம் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருச்சியில் மஹேந்திரா நிறுவனத்தின் புதிய வாகனத்தை மாநகரக் காவல்துறை உதவி ஆணையா் அஜய் தங்கம் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

திருச்சி சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் இந்த வாகனத்தை அவா் அறிமுகம் செய்து வைத்தாா். மஹேந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ எனும் இந்தப் புதிய வாகனமானது, பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன், அதிகபட்ச பாதுகாப்புத் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ. 8.48 லட்சம் என்ற ஆரம்ப விலையிலிருந்து வசதிகளுக்கேற்ப கூடுதல் விலையுடன் இந்த வாகனம் சந்தைக்கு வந்துள்ளது.

அறிமுக விழாவில், சிவா ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பொதுமேலாளா் கிருஷ்ணசாமி, விற்பனைப் பிரிவு அலுவலா்கள், ஷோ-ரூம் பணியாளா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.