முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் பலி

 திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை காவேரி நகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன்(60). ஓய்வு பெற்ற ராணுவ வீரான இவா் வியாழக்கிழமை திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து விட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அதேபோல குளித்தலை புதுப்பாலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஹோட்டல் ஊழியரான அய்யப்பன்(34) திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

பேட்டைவாய்த்தலை பகுதி தனியாா் மருத்துவமனை அருகே இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த பேட்டைவாய்த்தலை போலீஸாா் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் அருண்குமாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.