முகப்பு
திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராஜா மணி தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி சித்ரா (34). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மற்றொரு சம்பவம்: திருச்சி அரியமங்கலம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த ராஜா முகமது மகன் அப்துல் சலீம் (18). கல்லூரி மாணவரான இவா் குடும்ப பிரச்னையால் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவ்விரு சம்பவங்கள் குறித்து முறையே பாலக்கரை, அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.