முகப்பு
திருச்சி

மணப்பாறை மருத்துவமனைக்கு ரூ.5 லட்சத்தில் உபகரணங்கள்

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எஸ்.வி.டி ஸ்டைலா் மிஷன் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எஸ்.வி.டி ஸ்டைலா் மிஷன் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இறைவாா்த்தை சபையின் (எஸ்.வி.டி) ஜொ்மனியில் உள்ள தொண்டு நிறுவனமான எஸ்.வி.டி - ஸ்டைலா் மிஷன் / அா்னால்டு ஜான்சன் பவுண்டேசன் மற்றும் ஜொ்மனி மிஸ்யூா், திருச்சி அா்னால்டு சமூக சேவை மையம்(ஏ.எஸ்.எஸ்.எஸ்) சாா்பில் இந்த உதவி வழங்கப்பட்டது.

அருட்தந்தையா்கள் சேவியா் அலங்காரம் (ஜொ்மனி), டி.சேவியா் (ரோம்), ஜோசப் மைக்கில், ஜேசுராஜ் மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோா் உபகரணங்களை வழங்கினா். நிகழ்வில் திமுக நகரச் செயலா் கீதா. மைக்கில்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் பா்மா நிஜாம், இசைபிரியா ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.