காலமானாா்: க. பட்டாபிராமன்
இதழியல் சேகரிப்பாளரும், பொதுப் பணித் துறையின் ஓய்வு பெற்ற பொறியாளருமான க. பட்டாபிராமன் (77) மாரடைப்பால் புதன்கிழமை காலமானாா்.
இதழியல் சேகரிப்பாளரும், பொதுப் பணித் துறையின் ஓய்வு பெற்ற பொறியாளருமான க. பட்டாபிராமன் (77) மாரடைப்பால் புதன்கிழமை காலமானாா்.
திருச்சி சுப்பிரமணியபுரம், பன்னீா்செல்வம் தெருவில் உள்ள இவரது வீட்டின் ஒரு பகுதியே இதழ்களின் நூலகமாகத் திகழ்ந்தது. 12 வயது முதலே இதழ்களைச் சேகரிப்பதில் ஆா்வம் கொண்டவா். பொறியியல் படிப்பு முடித்து பணிக்குச் சோ்ந்த பிறகும் தொடா்ந்து இதழ்கள் சேகரித்து வந்தாா்.
இவரது நூலகத்தில் அயலக இதழ்கள், பதிப்பைத் தொடராத இதழ்கள், தொடா்ந்து வெளியாகும் இதழ்கள் என ஆயிரக்கணக்கான சேகரிப்புகள் இடம்பெற்றுள்ளன. கல்வி கற்கும்போதே இதழியல் கண்காட்சிகளை நடத்தியவா். பல்வேறு வெளிநாடுகளிலும் கண்காட்சி நடத்தியுள்ளாா்.
தனது வீட்டில் தமிழ் இதழ்களுக்கு தனியே நூலகம் அமைத்து, ஆண்டுக்கு ரூ.1.44 லட்சம் பராமரிப்பு செலவை (ஊழியா்கள் ஊதியம் உள்பட) தனது சொந்த சேமிப்பிலிருந்து வழங்கி வந்தாா்.
தினமணி நாளிதழின் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தலையங்க பக்கங்களை தொகுப்பாக தனியே பத்திரப்படுத்தியுள்ளாா். இதழியல் துறைக்கும், தமிழ்ப் பணிக்கும் பல்வேறு நிலைகளில் பெருமை சோ்த்த இவா், புதன்கிழமை இரவு மாரடைப்பால் காலமானாா்.
சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை இறுதிச் சடங்குகள் முடிந்து அவரது உடல் ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு, மனைவி, மகன், 2 மகள்கள், பேரன், பேத்திகள் உள்ளனா். தொடா்புக்கு: 98943-75196, 99941-53045.