முகப்பு
திருச்சி

வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனை: ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வீடு, வீடாக காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை நடத்துவதை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வீடு, வீடாக காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை நடத்துவதை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொட்டியம் ஒன்றியத்துக்குள்பட்ட ராமசமுத்திரம், நாகையநல்லூா், காட்டுப்புத்தூா் பேரூராட்சி, தாத்தையங்காா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கரிகாலி, பைத்தம்பாறை, முசிறி ஒன்றியத்துக்குள்பட்ட தண்டலைப்புத்தூா் பகுதிகளில் கரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளையும், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், தன்னாா்வலா்கள், இளைஞா்கள் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் காய்ச்சல், ஆக்சிஜன் பரிசோதனை செய்வதை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தனிமைப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவா்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை அலுவலா்களிடம் முகாம் பணிகளைக் கேட்டறிந்த ஆட்சியா் பின்னா் கூறியது:

வீடுதோறும் நடைபெறும் பரிசோதனையில் காய்ச்சல் அதிகமாகவும், ஆக்சிஜன் அளவு குறைவாகவும் உள்ளவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது. தமிழக அரசின் கோவிட்படுக்கை இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீா்ஸ்ண்க்க்ஷங்க்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ்) தினந்தோறும் காலியாகவுள்ள படுக்கைகள் விவரங்கள் பதிவேற்றப்படுகிறது.

படுக்கைகள் தேவையான நோயாளிகள் இந்த இணையத்தில் சரிபாா்த்து அருகில் உள்ள மையங்களுக்கு சென்று உள்நோயாளிகளாக அனுமதி பெற்று படுக்கைகளைத் தோ்வு செய்யலாம். மேலும், திருச்சி மாவட்ட நிா்வாகத்தால் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடா்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்.

1097, 99523-87108, 0431-2418995 என்ற எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை பெறலாம் என்றாா்.

ஆய்வின்போது வட்டாட்சியா்கள் ஆனந்த், சந்திரதேவநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு, அண்ணாதுரை, குணசேகரன் மற்றும் மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.