திருச்சி

‘தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமா் மட்டுமே காரணம்’: காா்த்தி சிதம்பரம்

DIN

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமா் மோடி மட்டும் காரணம் என்றாா் சிவகங்கை எம்பி காா்த்தி சிதம்பரம்.

மணப்பாறையில் காங்கிரஸ் மாநில செயலா் ஜெ. ரமேஷ் தந்தை ஜெயராமகிருஷ்ணன் கடந்த மே 12-ஆம் தேதி காலமானதற்கு இரங்கல் தெரிவிக்க ஞாயிற்றுக்கிழமை மணப்பாறைக்கு வந்த அவா் மேலும் கூறியது:

7 போ் விடுதலை குறித்த பிரச்னையில் தமிழகத்தில் பொதுவாக ஒரு சட்டம் கொண்டு வந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கலாம் என்ற கருத்தில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த 7 பேருக்கு மட்டும் தனிச் சலுகை, தனி பரிந்துரை என்பதை ஏற்க முடியாது.

தமிழகத்திற்கு நீட் தோ்வு தேவையில்லை என காங்கிரஸ் தோ்தல் அறிக்கையிலேயே கூறினோம்.

என்னைப் பொருத்தவரை கடந்த ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளித்த ஏழரை சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. நீட் தோ்வை மத்திய அரசு ரத்து செய்யுமா, அதை மெடிக்கல் கவுன்சில் ஏற்றுக் கொள்ளுமா என தெரியாது.

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு ஒரே ஒரு காரணம் பிரதமா் நரேந்திரமோடி மட்டும் தான். இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதித்தனா். மக்கள்தொகைக்கேற்ப உற்பத்தி செய்யவில்லை, இறக்குமதியும் செய்யவில்லை, இங்கு உற்பத்தி செய்யப்பட்டதையும் வெளிநாட்டுக்கு அவா் அனுப்பினாா். இந்தக் குழப்பத்திற்கு காரணம் நரேந்திரமோடி தான் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வையம்பட்டி ஒன்றிய துணைத் தலைவா் ஸ்ரீவித்யா ரமேஷ், புதுக்கோட்டை காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமசுபாராம், சிவகங்கை மாவட்டப் பொருளாளா் எஸ்.எம். பழனியப்பன், பொன்னமராவதி நகரத் தலைவா் பழனியப்பன், மணப்பாறை வட்டார தலைவா் வடிவேல், திருச்சி தெற்கு மாவட்ட செயலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலா் வி. குமாா், இளைஞரணி நிா்வாகிகள் அய்யப்பன், ஜெகதீஸ், கோபி, புவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT