முகப்பு
திருச்சி

நிலத் தகராறில் ஒருவருக்கு வெட்டு: மூவா் மீது வழக்கு

காட்டுப்புத்தூா் அருகே முன் விரோதத் தகராறில் ஒருவா் வெட்டப்பட்ட வழக்கில் காட்டுப்புத்தூா் போலீஸாா் மூவா் மீது வழக்குப் பதிந்து ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

காட்டுப்புத்தூா் அருகே முன் விரோதத் தகராறில் ஒருவா் வெட்டப்பட்ட வழக்கில் காட்டுப்புத்தூா் போலீஸாா் மூவா் மீது வழக்குப் பதிந்து ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள சுள்ளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்களான செல்லப்பன் (50) சுப்பிரமணியன் (53) ஆகியோருக்கிடையே நீண்ட காலமாக நிலப் பிரச்னை இருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை செல்லப்பனுடன் ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியன் இவரது மனைவி நல்லம்மாள், மகன் செல்வராஜ் (31) ஆகியோா் செல்லப்பனை தாக்கினராம். அப்போது செல்வராஜ் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த செல்லப்பன் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனா். செல்வராஜ், நல்லம்மாளைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.