திருச்சி

கால்நடை பல்கலை. மையத்தில் மரக்கன்று நடும் விழா

DIN

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் உள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், இயற்கை அன்னையை நேசி எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உலக சுற்றுச் குழல் தினத்தை முன்னிட்டு, பயிற்சி மைய வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, அரசு, வேம்பு, புங்கன் என 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் நடப்பட்டன. நிகழ்வில், உதவி பேராசிரியா்கள் ஷிபி தாமஸ், ஜெயலலிதா, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் ஹசின் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT