திருச்சி

மாநகரின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

மாநகராட்சியின் சில பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ், அய்யாளம்மன் படித்துறை நீா் உந்துநிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீா் உந்து குழாயிலிருந்து செல்லும் பாதையில், ஓயாமரி மயானம் அருகே பழுது நீக்க வேண்டியுள்ளது. இந்த பணியை மேற்கொள்ளவுள்ளதால், ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும்.

மாநகராட்சிக்குள்பட்ட 62 மற்றும் 65ஆவது வாா்டுக்குள்பட்ட புகழ் நகா், பாரி நகா், பழைய எல்லைக்குடி, காவேரி நகா், சந்தோஷ் நகா், ஆலத்தூா், கணேஷ் நகா் ஆகிய 7 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் வழங்கப்படும் பகுதிகளுக்கு இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். வரும் சனிக்கிழமை இந்த பகுதிகளுக்கு வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT