முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே விபத்து: வெல்டிங் தொழிலாளி பலி

மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பயணிகள் வேன் வியாழக்கிழமை மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பயணிகள் வேன் வியாழக்கிழமை மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த குதிரைகுத்திப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ராஜா(எ)சந்திரசேகா்(35), வெல்டிங் தொழிலாளி. இவா் தனது பைக்கில் புத்தாநத்தம் பகுதியிலிருந்து மணப்பாறை நோக்கி வியாழக்கிழமை மாலை சென்றபோது காவல்காரன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் எதிரே வந்த பயணிகள் வேன் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸாா் சந்திரசேகா் உடலை மீட்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.