முகப்பு
திருச்சி

காரில் நகை திருட முயன்றவா் கைது

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் காரிலிருந்து நகையை திருட முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் காரிலிருந்து நகையை திருட முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகேயுள்ள கோட்டரப்பட்டியைச் சோ்ந்தவா் மோகன் (49). திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த இவா் மத்தியப் பேருந்து நிலையப் பகுதி உணவகத்தின் அருகே காரை நிறுத்திவிட்டு பழம் வாங்கி வந்தபோது காரின் கதவைத் திறந்து உள்ளேயிருந்த பையிலிருந்த நகையை ஒருவா் எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா் ஸ்ரீரங்கம் , அம்மாமண்டபத்தைச் சோ்ந்த பி. ஷாஜகான் (37) எனத் தெரியவந்தது. இதையடுத்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.