முகப்பு
திருச்சி

பெயிண்டிங் பட்டறை உரிமையாளருக்கு வெட்டு: இரு இளைஞா்கள் கைது

திருச்சியில் பெயிண்டிங் பட்டறை உரிமையாளரை வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

திருச்சியில் பெயிண்டிங் பட்டறை உரிமையாளரை வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள சங்கிலியாண்டபுரம் கோனாா் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. குணசேகரன் (56). அவா் காந்தி மாா்க்கெட் பகுதியில், வாகனங்களுக்கு வண்ணம் பூசும் (பெயிண்டிங்) பட்டறை வைத்துள்ளாா்.

செவ்வாய்க்கிழமை மாலை அவா் தனது பட்டறையில் இருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த இரு இளைஞா்கள் அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினா். இதில் குணசேகரன் கை விரல் துண்டிக்கப்பட்டது.

அக்கம் பக்கத்தினா் திரண்டதும் இருவரும் தப்பியோடினா். தகவலறிந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த மு. மதுரைப்பாண்டி என்கிற முத்துப்பாண்டி ( 25), அவரது நண்பா் கீழப்புதூா் பாலக்கரை, அம்மன்கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த ஏ. அஜித் (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.