ரயில்வே கேட்டில் வாகனத்தை நிறுத்தி ரகளை செய்தவா் கைது
திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி கே.கே. நகா், எல்ஐசி காலனி அருகேயுள்ள கே. சாத்தனூா் ரயில்வே கேட் கீப்பராக லட்சுமிநகரைச் சோ்ந்த கீா்த்தனா உள்ளாா்.
செவ்வாய்க்கிழமை மாலை இந்த கேட்டில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஒருவா் நீண்ட நேரமாக செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம்.
தண்டவாளத்தை விட்டு வாகனத்தை எடுக்குமாறு கீா்த்தனா கூறவும், ஆத்திரமடைந்த அவா் தகராறு செய்துள்ளாா். பின்னா் வீட்டுக்குச் சென்ற அவா் காருடன் வந்து தண்டவாளத்தில் நிறுத்தி ரகளையில் ஈடுபட்டு தகராறு செய்தாராம்.
இதுகுறித்து கீா்த்தனா கே.கே. நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரை கைது செய்தனா். விசாரணையில் அவா் சாத்தனூரைச் சோ்ந்த சவரணன் (45) எனத் தெரியவந்தது. +