மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது
மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறும் முகாமில் 18 வயது அதற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டையுடன் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். இந்த அரிய வாய்ப்பை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.