முகப்பு
திருச்சி

காந்தி சந்தை ஜூன் 20-இல் திறப்பு?

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட காந்தி சந்தை ஜூன் 20ஆம் தேதி திறக்கப்படும் என வியாபாரிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட காந்தி சந்தை ஜூன் 20ஆம் தேதி திறக்கப்படும் என வியாபாரிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

திருச்சியில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காந்தி சந்தை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை காந்தி சந்தை வெளியே உள்ளசாலைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று குறைந்து வரும் வேளையில், மீண்டும் காந்திசந்தையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்க நிா்வாகிகள்அமைச்சா் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்து முறையிட்டனா்.

இந்நிலையில், கலையரங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் சு.சிவராசு கூறுகையில், திருச்சியில் கரோனா தொற்று, காந்திசந்தை மூலம் பரவி விடக்கூடாது. இதற்கு வியாபாரிகள் உத்தரவாதம் அளித்தால் காந்திசந்தையை ஜூன் 20ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் திறந்து மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தடுப்பூசி மற்றும் விதிமுறைகள்: காந்தி சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வியாபாரிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில், காந்திசந்தைக்குள் வியாபாரம் செய்ய அனுமதியில்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.