கும்பகோணத்தில் இன்று முதல் ஜூன் 25 வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள்
கும்பகோணம் தெற்கு உப கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 18) முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம் தெற்கு உப கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 18) முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தெற்கு உதவி செயற் பொறியாளா் க. சங்கா் தெரிவித்திருப்பது:
அரியதிடல், சாக்கோட்டை, அண்ணலக்ரஹாரம், கொற்கை, மங்கம்மாள்புரம், மருதாநல்லூா், திப்பிராஜபுரம், நந்திவனம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, திருநாகேசுவரம், சீனிவாசநல்லூா், முருக்கங்குடி, திருபுவனம், அம்மன்குடி, புத்தகரம், தண்டந்தோட்டம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையும் (ஜூன் 19), முத்துபிள்ளை மண்டபம், பழவாத்தான்கட்டளை, கொரநாட்டுக் கருப்பூா், மணஞ்சேரி, அசூா், சாத்தங்குடி ஆகிய பகுதிகளில் ஜூன் 21 ஆம் தேதியும், நாச்சியாா்கோவில், துக்காச்சி, கோலியகுடி, குமாரமங்கலம், சாக்கோட்டை, திருநறையூா், கிருஷ்ணாபுரம், சிவபுரம் ஆகிய பகுதிகளில் ஜூன் 22 ஆம் தேதியும், அம்மன்குடி, புத்தகரம், திருநீலக்குடி, விட்டலூா், செ. புதூா், மேலையூா், திருமலைராஜபுரம், இளந்துரை ஆகிய பகுதிகளில் ஜூன் 23 ஆம் தேதியும், எம்.ஆா்.எம்., தண்டந்தோட்டம், பௌண்டரிகபுரம், வில்லியவரம்பல் ஆகிய பகுதிகளில் ஜூன் 24 ஆம் தேதியும், செம்மங்குடி, திருச்சேறை, மாத்தூா், கூகூா் ஆகிய பகுதிகளில் ஜூன் 25 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.