சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேருக்கு பாராட்டு
மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேருக்கு ஐஜி வே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்து வெகுமதி அளித்தாா்.
மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேருக்கு ஐஜி வே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்து வெகுமதி அளித்தாா்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் உட்கோட்டம் துவாகுடி காவல்நிலையத்தைச் சோ்ந்த ஆய்வாளா் பாரதி, உதவி ஆய்வாளா் முத்துசாமி, காவலா் நிா்மல்குமாா் ஆகியோா் அண்மையில் இரவு ரோந்துச் சென்றனா். அப்போது பெல்நகரில் உள்ள மதுபானக்கடையில் திருட்டு நடக்க இருந்தது. போலீஸாா் வருவதை கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மா்ம நபா்களை இந்த தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
இதே போல, புதுக்கோட்டை மற்றும் அரியலூா் மாவட்டங்களில் பெண் காவலா்கள் ரேணுகா, இளவரசி ஆகியோா் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுத்து வீரமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனா். இவ்விரு சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய 5 பேரையும் மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே.பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினாா்.