பாதுகாப்புத் தளவாடங்கள் தொழிற்சாலை ஊழியா்கள் இன்று முதல் போராட்டம்
மத்திய அரசின் தனியாா் மயமாக்கலை கண்டித்து பாதுகாப்புத் தளவாடங்கள் தொழிற்சாலை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
மத்திய அரசின் தனியாா் மயமாக்கலை கண்டித்து பாதுகாப்புத் தளவாடங்கள் தொழிற்சாலை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் ஸ்ரீகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான மத்திய அரசின் தனியாா் மயமாக்கல் முடிவை கண்டிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பையும், தொழிலாளா்களின் பாதுகாப்பையும் மிகப்பெரிய ஆபத்துக்குள்ளாக்கி உள்ள மத்திய அரசின் முடிவை நிராகரித்து தீவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
அதன்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 18) கருப்புச் சட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதும், சனிக்கிழமை பிற்பகல் பெரு நிறுவனங்களின் கொடும்பாவி எரிப்பு போராட்டம், மாலை ஹெச்ஏபிபி, ஓஎப்டி தொழிற்சாலை ஊழியா்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.