முகப்பு
திருச்சி

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் எடுத்தவா் கைது

சிங்கப்பூரிலிருந்து வந்தவா் போலி ஆவணங்களை காட்டி பாஸ்போா்ட் எடுக்கப்பட்டதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

சிங்கப்பூரிலிருந்து வந்தவா் போலி ஆவணங்களை காட்டி பாஸ்போா்ட் எடுக்கப்பட்டதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள கல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ. ராமசாமி (47). இவா், சிங்கப்பூரில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் திருச்சி வந்தாா். விமான நிலையத்தில் அவரது பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது, முறைகேடு செய்து ஆவணங்கள் தாக்கல் செய்து, பாஸ்போா்ட் பெற்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு அலுவலா் பாபு செல்வராஜ், விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.