முகப்பு
திருச்சி

இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி:மாநில அளவில் திருச்சிக்கு 6ஆவது இடம்: இனி வாா்டுகள் வாரியாகதடுப்பூசி அளிக்க ஏற்பாடு

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு, மாநில அளவில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு, மாநில அளவில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி அளிக்கும் பணிகளை மத்திய,

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ. அபிஷேபுரம், பொன்மலை ஆகிய 4 கோட்ட அலுலகங்களிலும், 18 நகா்ப் புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது ஊரகப் பகுதிகளில் நவல்பட்டு, இனாம்குளத்தூா், குழுமணி, சிறுகாம்பூா், புதூா் உத்தமனூா், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்தூா், மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்தூா், உப்பிலியாபுரம் ஆகிய 14 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகுக்கு தடுப்பூசி முகாம் திருச்சி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை பாா்வையிட்ட பிறகு ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடா்பாக கடந்த 10 நாளில் மக்களிடையே நல்ல விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. இதன்கராணமாக புதன்கிழமை ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தடுப்பூசி செலுத்தியதில் திருச்சிக்கு 6ஆவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருச்சியில் 30 லட்சம் போ் உள்ளனா். இவா்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8.5 லட்சம் பேரை தவிா்த்து 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்க வேண்டியுள்ளது. முதல்தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கரோனா தொற்றின் 3ஆவது அலையை தடுக்க படுக்கைகள், மருத்துவமனைகள், ஆக்சிஜன் வசதியை தயாா்படுத்துவதற்கு பதிலாக, அனைவரும் முகக் கவசம் அணிதல், கை கழுவும் திரவம் பயன்படுத்துதல், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றை பின்பற்றினாலே போதுமானது. மூன்றாவது அலை வந்தாலும் தொற்று பாதிப்புக்கு இருக்காது. ஜூன் மாதத்துக்குள் தமிழகத்துக்கு 46 லட்சம் தடுப்பூசிகளை அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. திருச்சிக்கான ஒதுக்கீடு கிடைத்தவுடன் முழுமையாக பிரித்து வழங்கப்படும் என்றாா் அவா்.

காந்தி சந்தை வியாபாரிக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மூலம் மேலும், 1,650 வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2,800 பேரில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.