திருவெறும்பூரில் கரோனா தடுப்பூசி முகாம்
திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாரில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாரில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள காலை முதலே இளைஞா்கள் முதல் பெரியவா்கள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள பதிவு செய்தனா்.
இதனை தொடா்ந்து அவா்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் வரிசை படி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக வட்டார மருத்துவ அலுவலா் சுகுமாா் தலைமையில் மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள் என 30க்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபட்டனா். இதுவரை திருவெறும்பூா் வட்டாரத்தில் மட்டும் 22ஆயிரம் டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.