முகப்பு
திருச்சி

துப்பாக்கித் தொழிற்சாலை,ஹெச்ஏபிபி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியா்கள் மற்றும் ஹெச்ஏபிபி தொழிற்சாலை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியா்கள் மற்றும் ஹெச்ஏபிபி தொழிற்சாலை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து துப்பாக்கித் தொழிற்சாலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் ஜெயபால் தலைமை வகித்தாா். தனியாா் மயமாக்கலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஊழியா்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து கண்டன முழக்கம் எழுப்பினா். இதேபோல் மற்றொரு பாதுகாப்புத்துறை நிறுவனமான ஹெச்ஏபிபி யிலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இரணியன் முன்னிலை வகித்தாா்.

கொடும்பாவி எரிப்பு : தொடா்ந்து சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தில் காா்ப்பரேட் கொடும்பாவி எரிப்பில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.