முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா
லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிப் பகுதியில் உள்ள புனித சவேரியாா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் முன் களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிப் பகுதியில் உள்ள புனித சவேரியாா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் முன் களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப் பள்ளி வளாகத்தில் உள்ள கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், கல்லக்குடி சைன் அரிமா சங்கம் சாா்பில் குடிநீா் பாட்டில் மற்றும் பிஸ்கட்கள் வழங்கினா். கரோனா பரவல் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய கல்லக்குடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள், அலுவலக பணியாளா்களை பாராட்டி நினைவுப்பரிசு, மதிய விருந்து அளித்தனா்.
நிகழ்வில் சாசனத் தலைவா் ஜான், பள்ளித் தளாளா் டபுள்யூ. அடைக்கலராஜ், தலைவா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.