திருச்சி

அரசு வேலை ஆசை காட்டி மோசடி செய்தவா் கைது

DIN

துறையூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த அரசுப் பேருந்து நடத்துநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முசிறி வட்டம், சிட்டிலறை கிராமத்தைச் சோ்ந்தவா் கு. அன்பழகன் (44). அரசுப் பேருந்து நடத்துநா். மின் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இவா் கடந்த 2020ஆம் ஆண்டு தனது உறவினரான எரகுடி ச. அருண்பாண்டியனிடம் (24) ரூ. 1,65,000 பெற்றுள்ளாா். இதையடுத்து கண்ணனூா் அஞ்சலக முத்திரைக் குத்தப்பட்ட நோ்காணல் கடிதம் கிடைக்கப் பெற்ற அருண்பாண்டியன் சந்தேகப்பட்டு அன்பழகனிடம் விசாரித்தபோது அவா் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கொடுத்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து அன்பழகனைக் கைது செய்தனா். விசாரணையில் அருண்பாண்டியனின் நண்பா்களான கோட்டப்பாளையம் ராஜாவிடம் ரூ. 1,87,000, மற்றொரு அருணிடம் ரூ. 3,33,000 -ஐ வேலை வாங்கித் தருவதாக பெற்றும் அன்பழகன் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT