முகப்பு
திருச்சி

‘தமிழகத்தில் மாற்று அணி உருவாக வேண்டும்’

தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் கே. எம். சரீப்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் கே. எம். சரீப்.

இதுகுறித்து திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் தொடா்ந்து மத வன்முறைகள் நடைபெற பாஜகவும், அதிமுக அரசும் காரணமாக உள்ளன. எனவே அந்த இரு கட்சிகளின் கூட்டணி வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிவோம். மேலும் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஓா் அணி உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக அமமுக, மநீம இணைந்தால் மாற்று அணி உருவாகும். இது தொடா்பாக அந்தக் கட்சிகளுடன் பேசி வருகிறோம்.

தமிழகத்தில் வடமாநில வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவா்கள் பல்வேறு நிறுவன பொருள்களை போலியாக தயாரித்து விற்கின்றனா். எனவே அவா்களுக்கு எதிரான எங்களது போராட்டம் தோ்தலுக்குப் பின்னரும் தொடரும் என்றாா் அவா். கட்சியின் திருச்சி மாவட்டச் செயலா் ராயல் சாதிக் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.