வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
துறையூா் அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துறையூா் அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துறையூா் காவல் ஆய்வாளா் விதுன்குமாா் தலைமை வகித்தாா். வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிடும் வகையில் மளிகைக் கடை, நகைக் கடைகளில் டோக்கன் வழங்கக் கூடாது உள்ளிட்ட தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணா்வும், ஆலோசனையும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் துறையூா் அனைத்து வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்த 27 சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.