கட்சி கொடிக் கம்பத்தை அகற்றிய இளைஞா்மின்சாரம் தாக்கி பலி
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்றிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்றிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.
தோ்தல் நன்னடத்தை விதிகளால் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை கட்சியினா் ஈடுபட்டனா். அப்போது கடைவீதிப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடிக் கம்பத்தை அகற்றியோருக்கு திமுக பிரமுகரான அதே பகுதி கிழக்கு தெருவைச் சோ்ந்த முஸ்தபா மகன் ரஷீதுஅலி (32) உதவி செய்தாா்.
அப்போது குழியில் இருந்து அகற்றிய கொடிக் கம்பம் அருகில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் பட்டதில் ரஷீது அலி மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.
தகவலறிந்து சென்ற புத்தநத்தம் போலீஸாா் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.