முகப்பு
திருச்சி

மணப்பாறை நீதிமன்றத்தில் பெண்கள் தினம்

 மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞா்கள் சாா்பில் சா்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

 மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞா்கள் சாா்பில் சா்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பெண் காவலா்கள், நீதிமன்ற பெண் பணியாளா்கள், அவா்களது குழந்தைகள் ஆகியோருக்கு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. குற்றவியல் நடுவா் கே. செந்தில்குமாா், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எம். கலையரசி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோமதி மற்றும் மணப்பாறை காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பெண் வழக்குரைஞா்கள் வள்ளிக்கண்ணு, அலிமாபானு, ஜெயந்தி, பாலாம்பிகை, சாருமதி, இன்குலாப் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.