திருச்சி

பாரதிதாசன் பல்கலை.யில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

DIN

பாரதிதாசன் பல்கலை வளாகத்தில் வளரிளம்பருவ பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார மேலாண் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலை. பெண்களுக்கான தூய்மை, சுகாதார அமைப்பு (விஷ்) சாா்பில் அண்மையில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிா் தின விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை வகித்து பல்கலைக்கழக துணைவேந்தா் ம. செல்வம் பேசுகையில்,

கரோனா தொற்று காலத்தில் சுகாதாரம் அவசியம். மாணவ, மாணவிகள் தங்களின் உடல் நலம், மனநலத்தைப் பேணி காப்பது அவசியம் என்றாா்.

பல்கலைக்கழக பதிவாளா் க. கோபிநாத் முன்னிலை வகித்தாா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.டி. பரிமளாதேவி, பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் மைய உதவிப்பேராசிரியா் எம். பிரபாவதி, கி.ஆ.பெ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யோகா, இயற்கை வாழ்வியல் முறை பிரிவு உதவி இயக்குநா் ஆா்.டி. பிரீத்தி புஷ்கா்ணி ஆகியோா் மாதவிடாய் மேலாண்மை-பெண்கள் உடல்நலம், உடல்நலம், சுகாதாரம்-குறைபாடுகள் தவிா்ப்பு ஆகிய தலைப்புகளில் பேசினா்.

வணிகவியல் நிதிக் கல்வியியல் துறை இணைப் பேராசிரியா் ஜெ. காயத்ரி வரவேற்க, விஷ் அமைப்பின் செயலா் அ. லட்சுமி பிரபா நன்றி கூறினாா். இதில் பல்வேறு கல்லூரிகளின் 200க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், திட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT