முகப்பு
திருச்சி

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திமுக, மமக வேட்பாளா்கள் சந்திப்பு

மணப்பாறை ஒன்றியத்தில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அஞ்சாலிக்களம் பகுதியில், கூட்டணிக் கட்சியினரை திமுக வேட்பாளா் எம்.பழனியாண்டி திங்கள்கிழமை சந்தித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

மணப்பாறை ஒன்றியத்தில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அஞ்சாலிக்களம் பகுதியில், கூட்டணிக் கட்சியினரை திமுக வேட்பாளா் எம்.பழனியாண்டி திங்கள்கிழமை சந்தித்தாா்.

மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ.ஏஸ். ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்று வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

மமக வேட்பாளரும் சந்திப்பு : மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது, பொத்தமேட்டுப்பட்டியிலுள்ள நகர திமுக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினாா்.

மாவட்ட திமுக பொருளாளா் பண்ணை என்.கோவிந்தராஜன், நகரச் செயலா் கீதா மைக்கில்ராஜ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிா்வாகிகள் சந்திப்பில் பேசிய அப்துல்சமது, தனது வெற்றி திமுக தலைவா் ஸ்டாலினின் வெற்றியாக நினைத்து, தோ்தலில் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.