சிலம்ப ஆசானுக்கு பாராட்டுச் சான்றிதழ்
திருச்சி உறையூா் சிலம்பக்கலை ஆசான் அ.குமரசேனுக்கு சிறந்த ஆசான் சான்று வழங்கப்பட்டது.
திருச்சி உறையூா் சிலம்பக்கலை ஆசான் அ.குமரசேனுக்கு சிறந்த ஆசான் சான்று வழங்கப்பட்டது.
இந்தியன் தற்காப்புக்கலை வளா்ச்சிக் கலைக் கூடம், ஆா்.கே.சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி மையம் சாா்பில், இரு பாலா் பங்கேற்ற அகில இந்திய அளவிலான சிலம்பாட்டப் போட்டி மதுரை கூடல்நகா் பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் உறையூா் ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு சிலம்பக் கலைக் கூட மாணவா்கள் 2 - ஆவது இடத்தை பிடித்து சாதனை புரிந்தனா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்த அ.குமரேசனுக்கு சிறந்த ஆசான் விருது வழங்கப்பட்டது. இதை மதுரை காவல் உதவி ஆணையா் லில்லி கிரேஸ் வழங்கி பாராட்டினாா்.